Aluriteis Triloba [ அக்ரோட்டு ]
2000 அடிகள் உயரமுள்ள மலைப்பகுதிகளில் வளர்வதாகும். வாதுமையை போன்றது. மரங்கள் மிகவும் உயரமாக வளரும். இலைகள் சிறிது நீண்டவட்டமாகவும் தடிமனாகவும் இருக்கும். மலர்கள் வெண்மை நிறத்துடன் சிறியவகையாகக் கொத்துக்கொத்தாக பூக்கும்.
காய்கள் உருண்டை வடிவம் கொண்டிருக்கும். உடைத்தால் உள்ளே உருண்டையாக நான்குகொடுகளுடன் கரடு முரடான தோற்றத்துடன் பருப்பு காணப்படும். பருப்பு விண்டால் உட்பகுதி உயரினங்களின் மூளையின் தோற்றத்தில் காணப்படும். காபூல் நாட்டில் மிகுதியாக வளரும் மரமாகும்.
தன்மை
இது வாதுமை பருப்பைப் போன்ற தன்மையுடையது கபத்தையும் பித்தத்தையும் தோற்றுவிக்கும். இதன் பருப்பு இனிப்பும் சிறிது புளிப்புமான சுவை கொண்டது. விந்துவை வளர்க்கக்கூடியது. சுவையூட்டும் . மலத்தை மிகுதிப்படுத்தும்.
பயன்
காய்களின் மேல்தோல் காய் பருப்புகள் பயன்படுகின்றன.
தீர்க்கும் நோய்கள்
வாதபித்தம் ஷயம் வாதம் இதயநோய் இரத்ததோஷம் எரிச்சல் என்பனவற்றைப் போக்கும்.