ஆரோக்கியத்துக்கு 6
ஆரோக்கியப் பழக்கங்களைப் பின்பற்றும் பெண்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை என்கிறது லேட்டஸ்ட் அமெரிக்க ஆய்வு. 88 ஆயிரத்து 940 பெண்களிடம் 20 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆரோக்கியமான பழக்கங்கள் எனப் பட்டியலிட்டிருக்கிறவற்றில் முக்கியமான 6 இதோ... 1. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதிருத்தல் 2. வாரம் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி 3. வாரம் 7 மணி நேரத்துக்கும் குறைவாக டி.வி. பார்த்தல் 4. குடிப்பழக்கம் இல்லா திருத்தல் 5. பி.எம்.ஐ. அளவை சரியாக வைத்திருத்தல் 6. சரிவிகித உணவுப்பழக்கம். சோடா போடா! அதிக சோடா மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அருந்தும் பெண் குழந்தைகள் சராசரி வயதை விட கொஞ்சம் சீக்கிரமாகவே வயதுக்கு வந்துவிடுவதாக எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதிக அளவு சோடா குடிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயமும் அதிகம். தைராய்டு பேஜாரு... தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு களால் மாதவிலக்கிலும் மாறுதல் ஏற்படும். இது குழந்தைப் பிறப்பிலும் பிரச்னை ஏற்படுத்தும். அபார்ஷன், குறைப் பிரசவம்,
வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கும் இது காரணமாகக்கூடும். தைராய்டு பிரச்னையை சரிசெய்யும் போது இந்தப் பிரச்னைகளும் குறையும்.