வங்கிகளில் பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்!
சென்னை: வங்கிகளில் பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''பழைய, கிழிந்த மற்றும் அழுக்கான, குறிப்பாக சிறிய மதிப்பிலக்க 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்றி, அவற்றுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழங்கப்பட உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் சுத்த நோட்டுக் கொள்கையின் கீழ், தனிச் சிறப்பு ஏற்பாடாக நாளைக்கு (25 ஆம் தேதி) 32 வணிக வங்கிகளின் 195 கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதோடு, கிழிந்த, சிதைந்த நோட்டுகள் மற்றும் குறைபாடுடைய நோட்டுகளையும் குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளைகளில் நாளை மாற்றிக்கொள்ளலாம். அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா,