விவேக் படம் பார்த்து வளர்ந்தவன் நான்: சிவகார்த்திகேயன்
நடிகர்
விவேக், நாயகனாக நடித்துள்ள 'பாலக்காட்டு
மாதவன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில்
சிவகார்த்திகேயன் பேசும் போது. "விவேக்
சாருக்கு நான் பள்ளி வயது
பருவத்திலிருந்து பரம ரசிகன். அவர்
படம் பார்த்து வளர்ந்தவன் நான். அவரது காமெடிக்
காட்சிகளை ஒன்று விடாமல் வீட்டில்
போட்டுப் பார்ப்பேன். விவாதம் எல்லாம் வரும்.
அப்போது அவர் ஒரு காட்சியிலாவது
கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறாரா
இல்லையே என்பேன். அவரது பாதிப்பு நிச்சயம்
எனக்குள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது.
அந்த அளவுக்கு என்னைப்பாதித்தவர் அவர்.
அவரது சீர்திருத்தக் கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு.
அவரைப் போலவே எனக்கும் கடவுள்
நம்பிக்கை உண்டு. ஆனால் மூட
நம்பிக்கை இல்லை. கல்லூரிக் காலங்களில்
மாணவிகள் அவரை ஒரு கதாநாயகன்
போலப்பார்ப்பார்கள். அவர் மீது அவ்வளவு
அபிமானம் வைத்து இருப்பார்கள். 'குஷி'
படத்தில் அவர் ஓபனிங் காட்சியில்
வந்த போது கைதட்டினார்கள். திருச்சி
ராஜா கலையரங்கத்தில் 1350 பேரும் எழுந்து நின்று
கைதட்டினார்கள்.
அப்போது
அதில் நானும் ஒருவன். எப்படியும்
என் காமெடிக்காட்சிகளில் அவரது பாதிப்பு நிச்சயம்
இருக்கும். உள்ளுக்குள் அதுதானே இருக்கிறது. மான்
கராத்தே படத்தில் வரும் அந்த 'ரத்தி
அக்னி ஹோத்ரி' டின்பீர் வசனம்
எல்லாம் பாராட்டப்படுகிறது. ஆனால் அது எப்போதோ
அவர் பேசியதை நான் காப்பியடித்ததுதான்.
அவர் விழாவில் நான் கலந்து கொள்வதில்
மகிழ்ச்சி அடைகிறேன். " இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.