44 வயசானாலும் சாதனை படைத்த பிராட் ஹாக்!
சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று மயிரிழையில் தோல்வியைத் தழுவினாலும் கூட அந்த அணியின் பிராட் ஹாக் புதிய சாதனை படைத்தது, ஆறுதல் தந்திருக்கும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த சுழற்பந்து வீச்சாளருக்கு வயது 44 ஆகி விட்டது. இந்த வயதில், நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சென்னையில் வைத்து ஒரு ஐபிஎல் சாதனையைப் படைத்தார். அது என்ன சாதனை என்றால் அதிக வயதில் ஐபிஎல் போட்டியில் ஆடியவர் என்ற சாதனைதான்
44 வருடம் 81 நாட்கள் பிராட் ஹாகுக்கு 44 வருடம் 81 நாட்கள் வயதாகிறது. சுனில் நரீனுக்குப் பதில் கடைசி நேரத்தில் பிராட் ஹாக் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டு நேற்றைய ஆட்டத்தில் விளையாடினார். ஜஸ்ட் 50 லட்சம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஹாக்கை 50 லட்சம் ரூபாய்க்கு இந்த வருடம் ஏலம் எடுத்து வாங்கியிருந்தது. நேற்றுதான் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. முன்பு ராஜஸ்தான் கொல்கத்தா அணிக்கு வருவதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியவர் பிராட் ஹாக். ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ல் கடைசிப் போட்டி 2013ம் ஆண்டு இவர் கடைசியாக ஐபிஎல் போட்டியில் ஆடியிருந்தார். அதன் பின்னர் விளையாட முடியாத சூழல் நிலவியது. இப்போது 2 வருட இடைவெளிக்குப் பிறகு ஆடியுள்ளார். இளம் வீரர் சர்பிராஸ் கான் முன்னதாக நடப்பு ஐபிஎல்லில் மிகவும் இளைய வீரர் என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சர்பிராஸ் கான் பெற்றார். இவருக்கு வயது 17தான் ஆகிறது. நல்லாத்தான் போட்டாரு நேற்றைய போட்டியில் பிராட் ஹாக் நன்றாகத்தான் பந்து வீசினார். 4 ஓவர்களை முழுமையாகப் போட்ட அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.