ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20போட்டி முறையில் நடைபெறும்
ஆசியக் கோப்பை கிரிக் கெட் போட்டி டி20போட்டி அடிப்படையில் 20ஓவர் போட்டியாக நடைபெறும் என ஆசிய கிரிக் கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி சையத் அஷ்ரப் புல் ஹக் தெரிவித்தார். ஆசிய கோப்பை கிரிக் கெட் போட்டி தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.இந்த பந்தயம் 50ஓவர் போட்டியாக நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் புதிய மாற்றங்கள் வருகிறது.
இது குறித்து ஆசிய கிரிக் கெட்கவுன்சிலின் தலைமை நிர்வாகி சையத் அஷ்ரப்புல் ஹக் கூறியதாவது,
2016ம்ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக் கெட் போட்டி 50ஓவர் போட்டியாக நடைபெறாமல் 20 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றம் செய்யப்படுகிறது.இந்த போட்டி அடுத்த ஆண்டில் முன் கூட்டியே நடைபெறும். 2019ம்ஆண்டு உலகக் கோப்பை கிரிக் கெட் நடக்கிறது. அந்த உலகப்போட்டிக்கு முன்னதாக 2018ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி 50 ஓவர்போட்டியாக நடத்தப்படும்.இதன் பின்னர் 2020ம்ஆண்டு ஆசியபோட்டி 20 ஓவர் போட்டியாக மீண்டும் மாற்றம் செய்யப்படும்.
ஆசியக் கோப்பை கிரிகெட்டில் மேலும் பல அணிகள் சேர்க்கப்படும் . இந்தபந்தயம் உலகக் கோப்பை பந்தயத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்.ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா,வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான்நேபாளம், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட் அணிகள் உள்ளன. இந்த அணிகளுடன் ஒன்று அல்லது இரண்டு புதிய அணிகள் இடம் பெறும். தகுதிச்சுற்று போட்டியில் தேர்வாகும் புதிய அணிகள் ஆசிய கோப்பையின் பிரதான போட்டியில் ஆடும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்