சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க பாஸ்
வைபை சிக்னல்
வீடு முழுவதும் வைபை சிக்னல் பெற அதிக டிரான்ஸ்மிட் பவர் கொண்ட ரவுட்டர் பயன்படுத்தலாம்.
ரவுட்டர்
முடிந்த வரை வைபை ரவுட்டரை உயரமான இடத்தில் வைத்தால் சிக்னல் சரியாக கிடைக்கும். அதிகமாக வைபை பயன்படுத்தும் இடங்களில் கார்டுலெஸ் போன், மைக்ரோவேவ் போன்ற கருவிகளை வைக்காமல் இருப்பது நல்லது
ப்ரின்டர்
புதிதாக ப்ரின்டர் வாங்கும் திட்டம் இருந்தால் பில்ட் இன் வைபை இருக்கும் வயர்லெஸ் ப்ரின்டரை வாங்குவது நல்லது.
சார்ஜிங்
இன்று பல கருவிகளிலும் யுஎஸ்பி பின் இருக்கின்றதால், போர்ட்ரானிக்ஸ் என்ற கருவியை பயன்படுத்தலாம். விலை குறைவாக இருக்கும் இந்த கருவியை கொண்டு ஒரே நேரத்தில் 6 கருவிகளை சார்ஜ் செய்ய முடியும்.
ரிமோட்
வீட்டில் பல கருவிகளை ரிமோட் மூலம் இயக்க யுனிவர்சல் ரிமோட் கன்ட்ரோல் சிறந்த தேர்வாக இருக்கும்
பவர் ட்ரெயின்
சில கருவிகள் ஸ்டான்ட்பை மோடில் இருக்கும் போதும் மின்சக்தியை பயன்படுத்தும், இதனால் அவைகளை ஆஃப் செய்து வைப்பது நல்ல தீர்வாக இருக்கும். இதற்கு பவர் கன்சம்ப்ஷன் மானிட்டர் பயன்படுத்தலாம். மேலும் பவர் கன்சம்ப்ஷன் மானிட்டர் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் கருவி எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றது என்பதை தெளிவாக காட்டும்
கேபிள்
வீட்டில் பயன்படுத்தும் ஒவ்வொரு கருவிகளிலும் நிறைய கேபிள்கள் இருக்கும். அவைகளை ஒழுங்காக வைத்து கொள்ள டேப் கொண்டு இணைக்கலாம், அல்லது கேபிள் கவர் ஆர்கனைஸர் பயன்படுத்தலாம்.