டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்று அனைவராலும் புகழாரம் சூட்டப்படும் மகேந்திர சிங் டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் உலக பிரசித்தி பெற்றது! அதிவேக பந்துவீச்சாளர்கள், சுழல் பந்துவீச்சாளர்கள் என அனைவரின் பந்துகளையும் துவம்சம் செய்த ஷாட் தான் டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்!!!
உலகின் மற்ற அதிரடி விளையாட்டு வீரர்களுக்கும் டோனிக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. அவர்கள் எல்லாம் 6 அடிக்க உயிரை கொடுத்து ஓங்கி அடிப்பார்கள். ஆனால், நம்ம "தல" டோனி மிகவும் அசால்ட்டாக பந்தை நெம்பிவிடுவது போல தான் இருக்கும் ஆனால், பந்து ஆடுகளத்தின் கூரையைப் தாண்டி பறந்துக்கொண்டிருக்கும்.
டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டின் புஜபலம் குறித்தும், அவர் அப்படி என்ன சாப்பிட்டு இப்படி சிக்ஸர் மன்னனாக திகழ்கிறார் என நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? ஆறாம் வாய்ப்பாடு ரன்கள் தேவை என்றாலே சிக்ஸர்களாக தூக்கி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் மன்னன் டோனியின் உடற்திறன் மற்றும் உணவுக் கட்டுப்பாடு ரகசியம்....
ஜிம்மிற்கு "நோ"
நம்ம "தல" டோனிக்கு ஜிம் செல்வதெல்லாம் பிடிக்காதாம். மிக சில உடற்பயிற்சி உபகரணங்களை தனது வீட்டிலேயே வைத்திருக்கிறார். ட்ரெட்மில் மற்றும் ஸ்ட்ரெச்சிங் போன்ற பயிற்சிகளை மட்டும் மேற்கொள்வார்.
பாட்மிட்டன்
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஜிம்மிற்கு போக வேண்டும் என்பது அவசியம்அல்ல பாட்மிட்டன் விளையாடினாலே போதும் என்கிறார் டோனி. தினமும் பாட்மிட்டன் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
காலை உணவு
பி.சி.சி.ஐ உணவு கட்டுப்பாடு நிபுணரின் அறிவுரைப்படி தினமும் ஓட்ஸ் மற்றும் பால், நட்ஸ், பழங்கள் போன்றவற்றை தான் காலை உணவாக எடுத்துக் கொள்கிறார் டோனி.
மதிய உணவு
மதியம் பெரும்பாலும் சப்பாத்தியும் அதனுடன் தால் அல்லது சிக்கனை மதிய உணவாக எடுத்துக் கொள்கிறார் தல டோனி.
சிக்கன் பிரியர்
சிக்கன் தான் டோனிக்கு மிகவும் பிடித்தமான உணவாம். தினமும் மாலை வேலை சிக்கன் சேர்த்து சமைத்த ஏதாவது உணவை சாப்பிடுகிறார். சிக்கன் சண்ட்விச் டோனிக்கு பிடித்த உணவு.
ப்ரோடீன் ஷேக்
மற்றும் தனது உடற்திறமை அதிகரிக்க தினமும் ப்ரோடீன் ஷேக் உட்கொள்கிறார் மகேந்திர சிங் டோனி.
பயிற்சி நேரங்களில்
கிரிக்கெட் வலை பயிற்சியில் ஈடுப்படும் போது நட்ஸ் மற்றும் வேகவைத்த தானிய உணவுகளை சாப்பிடுவாராம் டோனி.
உடற்பயிற்சி
தினமும் குந்து (Squat) பயிற்சியில் ஈடுப்படுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் டோனி. குறைந்தது நூறு முறையாவது இந்த பயிற்சியில் ஈடுப்படுகிறார் டோனி.