ஆபத்து காலங்களில் பயன்படும் சில ஆன்டிராய்டு செயலிகள்
ஆபத்து நேரும் காலம் யாராலும் யூகிக்க முடியாத ஒன்று. அனைவரும் எப்பொழுதும் ஆபத்துகளை சந்திக்க மனதளவில் தயாராக இருப்பது அவசியமாகும். இங்கு ஆபத்து காலங்களில் பயன்படும் சில ஆன்டிராய்டு செயலிகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். ஆன்டிராய்டு போன் அல்லது டேப்ளெட் கருவிகளில் இந்த செயலிகள் எப்படி பயனுள்ளதாக இருக்கின்றது என்பதை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
தகவல்
இயற்கை சேதங்கள் வரும் முன் எச்சரிக்கை செய்யும் செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
முதலுதவி
ரெட் க்ராஸ் நிறுவனத்தின் ஃபர்ஸ்ட் ஏய்டு செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள், இந்த செயலியை கொண்டு முதலுதவி அளிக்க கற்று கொள்ள முடியும்.
ஏஆர்
ரெட் கிராஸ் இல்லாமல் பல நிறுவனங்களும் பர்ஸ்ட் ஏய்டு செயலிகளை வழங்குகின்றன, அந்த வரிசையில் ஒரு செயலி தான் ஏஆர் பர்ஸ்ட் ஏய்டு செயலி.
ப்ளாஷ் லைட்
இந்த செயலி பெரும்பாலானோர் பயன்படுத்தலாம், ப்ளாஷ்லைட் ஆபத்து காலங்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
பவர் டார்ச்
இந்த செயலியை கொண்டு போனினை அன்லாக் செய்யாமல் டார்ச் ஆன் செய்ய முடியும்.
அவசரம்
ஆபத்து காலங்கள் இல்லாமல் எந்நேரமும் In Case of Emergency ICE செயலியில் மருத்துவ பதிவுகளை வைத்து கொள்ள முடியும்.