மீண்டும் வருகிறது லூனா மொபட்... டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பருக்கு புதிய போட்டி
மீண்டும் லூனா மொபட் பிராண்டை அறிமுகம் செய்யும் முயற்சிகளை மஹிந்திரா நிறுவனம் துவங்கியிருக்கிறது.
லூனா மொபட்டை விற்பனை செய்த கைனடிக் நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தியது மஹிந்திரா. கைனெடிக் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை மஹிந்திரா வசம் இருக்கிறது.
இந்த நிலையில், லூனா பிராண்டை மஹிந்திரா மீண்டும் கையிலெடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, லூனா பிராண்டு பெயரை மீண்டும் பதிவு செய்திருக்கிறது மஹிந்திரா. லூனா மற்றும் லூனா டிஎஃப்ஆர் ஆகிய பிராண்டுகளை தனது நிறுவனத்தின் கீழ் சமீபத்தில் பதிவு செய்திருக்கிறது மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனம்.
ஏற்கனவே 50சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த லூனா மொபட்டை தற்போது 70சிசி எஞ்சினுடன் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லூனா மொபட்டுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் இருக்கிறதாம்.
லூனா பிராண்டிலேயேடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் விற்பனையை பார்த்தே இந்த செக்மென்ட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை உணர்ந்து கொண்டு தற்போது லூனா மொபட்டுகளை களமிறக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது.