ஹெச்.ஐ.வி. கிருமியின் இரண்டு உட்பிரிவுகளுடைய ஊற்றுக்கண் கேமரூன் கொரில்லாக்கள்
எய்ட்ஸ் நோயை விளைவிக்கும் ஹெச் ஐ வி வைரஸின் இரண்டு உட்பிரிவுகள் தென்மேற்கு கேமரூனில் உள்ள கொரில்லாக்களிடமிருந்து வந்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த வைரஸின் மற்ற இரண்டு உட்பிரிவுகள் அதே நாட்டை சேர்ந்த சிம்பான்ஸிகளிடமிருந்து வந்திருப்பதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தற்போதைய கண்டுபிடிப்பால், ஏய்ட்ஸை விளைவிக்கும் வைரஸின் அனைத்து உட்பிரிவுகளுமே எங்கிருந்து வந்தது என்பது தெரிவியவந்துள்ளது.
மனிதர்களிடையே பெரிய அளவில் நோய்களை பறப்பும் திறனுள்ள ஹெச் ஐ வி வைரஸ்களின் புகலிடமாக இந்தக் குரங்கினங்கள் இருப்பதாக இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக, ஆராய்ச்சியை மேற்கொண்ட பிரான்சின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த மார்டின் பீட்டர்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் நோய் 1980களின் ஆரம்பகாலத்தில் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை அந்த வைரஸ் கிட்டத்தட்ட 7 கோடியே 80 லட்சம் பேரிடம் பரவியுள்ளது. அதில் பாதிப்பேர் இறந்துவிட்டனர்.