சிரிக்க மட்டும்!!! - Today's (16/2/2015) FB Status From Tamilyoungsters.com

சிரிக்க மட்டும்.....




1) நண்பர் 1 : 24 மணி நேரமும் நான் டிவி பார்க்கணும், வருஷம் முழுக்க பாக்கணும், ஒரு நிமிஷம் விடாம பாக்கணும், ஆனா கண்ணு மட்டும் கெடாம இருக்கணும்..
நண்பர் 2 : அதுக்கு நீ டிவிய ஆப் பண்ணி தான் பாக்கணும்..
நண்பர் 1 : ?????
2) பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.
ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...
3) ஞாபக மறதி
கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.
மனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே
கணவன் : ?????
4) போலிஸ் : திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?
வீட்டுக்காரன் : சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!
போலிஸ் : ????
5) மனைவி : ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''
கணவன் : ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...''
மனைவி : ????
6) மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
ஆசிரியர் : ????
7) டைரக்டர் : இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.
ஹீரோ : எனக்கு நீச்சல் தெரியாதே.
டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்…குளத்துல தண்ணியே இருக்காது.
ஹீரோ : ????
8) நபர் 1 : உங்கள் சொந்த ஊர் எது?
நபர் 2 : அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லங்க, சொந்த வீடுதான் இருக்கு.
நபர் 1 : ???
9) நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?
குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க...
நீதிபதி: ????
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad