கண்கவர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள Samsung Galaxy S6
ஸ்மார்ட் கைப்பேசி உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட சம்சுங் நிறுவனம் புதிதாக Galaxy S6 மற்றும் S6 Edge எனும் இரு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து வருகின்றது.
இக்கைப்பேசிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.
இரு கைப்பேசிகளும் ஒரே சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதுடன் S6 Edge ஆனது வளைந்த வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.
இதன்படி 5.1 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய Quad HD தொடுதிரையினையும், Exynos 7420 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பனவற்றுடன் சேமிப்பு நினைவகத்தினை 32GB தொடக்கம் 128GB வரை அதிகரிக்கும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.