ராமாயணம் உண்மைக் கதையா? - Interesting Fact

ராமாயண வரலாறு உண்மையான கதையா என்பது பற்றி பலகாலமாக பெரும் விவாதம் நடந்து வருகிறது.
ராமாயணம் உண்மை வரலாறு என்று கூறுவதற்கு ஏதுவாக இந்தியா மற்றும் இலங்கையில் ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள சில இடங்கள் அமைந்துள்ளது.
இந்நிலையில் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் பற்றியும் அவற்றுக்கும் ராமாயணத்துக்குமான தொடர்பையும் பார்ப்போம்.
1. அயோத்தியாவில் ஹனுமன் ராமருக்காக காத்திருந்ததாக கூறப்படும் இடம், தற்போது ஹனுமான் கார்கி என்ற கோவிலாக உள்ளது.
2. நேபாளில் ஜனக்பூர் என்ற இடத்தில் ஜானகாவின் மகளான சீதா எனப்படும் ஜானகிக்கு கோவில் உள்ளது.
3. ராமர், சீதா தேவி மற்றும் லக்ஷ்மன் நாடு கடந்த போது, பஞ்சவடி என்ற இடத்தில் ஒரு குடிசையை அமைத்தனர். இந்த இடம் உண்மையில் நாஷிக் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
4. ராவணன் சீதா தேவியை கடத்திச் சென்ற போது, ஆந்திரா மாநிலத்தில் லேபக்ஷியில் ராவணை ஜடாயு நிறுத்த முயற்சித்தபோது அங்கு தான் ஜடாயு விழுந்தது.
5. லிபக்க்ஷி என்ற இடத்தில் ஹனுமானின் பெரிய கால் அடிகள் உள்ளது.
6. ராம் சேது, ராமரின் படையினரால் கற்களால் உருவாக்கப்பட்ட பாலம் ஆகும்.
7. ராவணன் சிவ வழிபாடு செய்த கோணேஸ்வரம் கோவில் இப்பொழுதும் இலங்கையில் உள்ளது.
8. அந்த கோவிலின் ஒரு பகுதியில் ராவணனின் சிலை உள்ளது. இதில் உள்ள 10 தலைகளின் அர்த்தம், ராவணன் 10 அரசாட்சிகளை 10 கிரீடங்களுடன் திறமையாக ஆண்டுள்ளார் என்பதன் வெளிப்பாடாகும்.
9. இன்றும் கோவிலின் அருகில் உள்ள கண்ணியா புனித கிணறு இன்றும் கோவிலின் அருகில் உள்ளது.
10. ராவணன் சீதா தேவியை இலங்கைக்கு முதல் முறையாக அழைத்துச் சென்ற இடமாக கருதப்படும் சீதா கொட்டுவா, இப்பொழுது இலங்கையில் வெளிநாட்டவர் சுற்றிப்பார்க்கும் இடங்களில் ஒன்றாக இருக்கிறது.
11. இங்கிருந்து அவர் சீதா தேவியை அழகான அடர்த்தியான காட்டுக்குள் அழைத்துச் சென்றார். இது இலங்கையில் உள்ள அசோகவனம் ஆகும்.
12. மாபெரும் அரக்கன் வடிவில் ஹனுமன் அசோகவனத்தை சென்று அடைந்த போது, அவரது பாதச்சுவடுகள் ஒரு குளத்தின் அருகில் உள்ள பாறையில் உள்ளது என்கின்றனர்.
13. ஹனுமன் இலங்கையை எரித்தார் என்று கூறும்போது, அவர் ராவணனின் இடத்தை மட்டுமே எரியச் செய்தார் என்கின்றனர்.
14. ராமர் சீதா தேவியை இலங்கையிலிருந்து காப்பாற்றிய பின்னர், இலங்கையில் உள்ள திவுரும்போலா என்னும் இடத்தில் அவளுடைய தன்மையை சோதிப்பதற்காக அக்னி பரீட்சையில் ஈடுபடச் செய்தார். தற்போது அந்த இடத்தில் ஒரு மரம் உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad