குழந்தைகளின் சோம்பேறித்தனம்...எச்சரிக்கை!!!
உங்க குழந்தை சோம்பேறியா இருக்கிறதா? அப்போ இதெல்லாம் பண்ணுங்க.....
இன்றைய காலத்தில் குழந்தைகள் புத்திசாலித்தனமாக இருக்கின்ற அதே சமயத்தில் மிகவும் சோம்பேறியாகவும் இருக்கின்றனர்.
இதற்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியே, இதனால் அவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாடுவது ஸ்மார்ட்போனில் விளையாடுவது போன்ற விளையாட்டுகளிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.
இது காலப்போக்கில் அவர்களை படுசோம்பேறியாக்கி விடுவதால், தங்கள் வேலைகளை செய்து கொள்வதில் கூட அவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
இவ்வாறு உங்கள் குழந்தைகள் சோம்பேறியாகிவிட்டால் அவர்களை திட்டி, அடித்து துவைத்து எடுக்காமல் எளிமையாக சமாளிக்க சில பயனுள்ள வழிகள் உள்ளன.
மனம்விட்டு பேசுங்க
சோம்பேறியாக இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் செய்ய வேண்டியவைகளில் முதன்மையானது, குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதோடு அவர்களிடம் பேச வேண்டும்.
மேலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு பொறுமையுடன் புரிய வைக்க வேண்டும்.
சின்னச்சின்ன வேலைகள்
குழந்தைகள் சோம்பேறியாக இருக்கும் போது, அவர்களிடம் சிறுசிறு வேலைகளைச் சொல்லி அவர்களை செய்ய வைக்க வேண்டும்.
ஒருவேளை அவர்கள் செய்ய மறுத்தால், வேலை செய்தால் நீ கேட்பதை வாங்கித் தருவேன் என்று சொல்லியாவது வேலையைச் செய்ய வையுங்கள்.
கவனமா பாத்துக்கணும்
சோம்பேறியாக இருக்கும் குழந்தையை கையாளும் போது, சற்று அவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில் இத்தகைய குழந்தைகள் எப்போதும் சோம்பேறித்தனமாக இருப்பதால், அவர்கள் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் கண்டுபிடிக்க முடியாது.
விருப்பமான விளையாட்டில் சேர்த்திடுங்கள்
உங்கள் குழந்தைகக்கு ஏதேனும் விளையாட்டின் மீது விருப்பம் இருந்தால், சற்றும் யோசிக்காமல் அதில் அவர்களை ஈடுபடச் செய்யுங்கள்.
இதனால் அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதுடன், மற்ற குழந்தைகளிடம் நட்புறவு கொண்டு, மற்றவர்களைப் பார்த்து எப்படி இருக்க வேண்டுமென்று கற்றுக் கொள்வார்கள்.
என்கரேஜ் பண்ணுங்க
சோம்பேறியான உங்கள் குழந்தை நீங்கள் கொடுக்கும் வேலையை நன்கு செய்தால் அவர்களை ஊக்குவியுங்கள்.
இது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுடன், உங்கள் பேச்சை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கும்.