உங்கள் ஸ்மார்ட் போனில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா?
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலருக்கும் பெரிய தலைவலியாக இருப்பது பேட்டரியில் உள்ள சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடுவது.
தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையில் ஸ்மார்ட் போனும் மிக முக்கியமானது என்ற சூழல் வந்துவிட்டது.
பல வேலைகளையும் கையில் வைத்திருக்கும் சிறிய ஸ்மார்ட் போன் மூலம் எளிதில் முடித்து விடலாம் என்ற நிலை மாறிவிட்டது. ஆனால் ஸ்மார்போனில் உள்ள பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்து விடுவது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
ஏன் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது?
* இலவச செயலி மற்றும் சில விளையாட்டு ஆப்களை பதிவிறக்கம் செய்யும் போது அதில் இடம் பெறும் விளம்பரங்களே அதிகமாக சார்ஜ் எடுத்து கொள்கின்றது. இதனால் அதிக விளம்பரங்கள் இருக்கும் இலவச செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள்.
* சிலர் தாங்கள் வைத்திருக்கும் அனைத்து செயலிகளையும் ஆன் செய்து வைத்திருப்பர். இதனால் போனின் செயல்பாடு அதிகரித்து பேட்டரி தீரும். நீங்கள் பயன்படுத்தாத சமயத்தில் செயலிகளை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.
* உங்களது இருப்பிடத்தில் சிக்னல் எப்படி இருக்கின்றது என்பதையும் பாருங்கள், குறைந்த சிகனல் இருக்கும் போது போனில் அதிகளவு சார்ஜ் செலவாகும்.
* பயன் இல்லாத சமயங்களில் ஜிபிஎஸ் சேவையை ஆஃப் செய்வது சார்ஜ் சீக்கிரம் காலியவதை தடுக்கும்.
* நீங்கள் பயன்படுத்தும் கருவியையும் பார்க்க வேண்டும். சிலர் அதிகளவு சிறப்பமசங்களை கொண்ட போன்களை பயன்படுத்துவர் அதில் சாதாரணமாகவே சார்ஜ் காலியாகும்.