Matrimony OTT-Platforms Jobs Coupons Business

கொழுப்பை குறைக்க என்ன செய்யலாம்?

கொழுப்பை குறைக்க என்ன செய்யலாம்?

உணவு இல்லையென்றால் உடல் சுருங்கி விடும் உடல் சுருங்கினால் உயிரும் சுருங்கி விடும் என்பது சித்தர்களின் வாக்கும் அறிவியலின் ஆராய்ச்சியும் உண்மையும் கூட
சாப்பிடுவதின் நோக்கம் என்ன? உடலின் சக்தி நிலையை பெறுவதற்குதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.வேலையே செய்யமால் தூங்கி கொண்டே இருக்கார் அய்யா அவருக்கும் இப்படிதானா? என்று ஒருவர் கேட்டகிறார் என்று வைத்து கொள்ளுங்கள். வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் உடல் தன் வேலைகளை செய்வதால் அதற்க்கு சக்தி தேவை படுகிறது. ஆனால் நம் உண்ணும் உணவுகளில் என்ன வகையான சக்தி கிடைகிறது என்பது மட்டும் நமக்கு தெரிவதில்லை
நம் உண்ணும் உணவுகள் ஆறு வகையான சத்துக்களாக பிரிக்கபடுகின்றன.
1) புரோட்டின்
2) கொழுப்பு
3) கார்போ ஹைட்ரேட்கள்
4) தாது உப்புக்கள்
5) நீர்
6) விட்டமின்கள்

நம் உடலின் சக்தியை அளவிடபடுக்கின்றன.உணவில் சேமிக்கப்பட்டுள்ள ரசாயன சக்தியை இது
வெப்ப சக்தியாக மாற்றி காலோரி என்ற அலகால் குறிப்பிடுக்கின்றனார் மருத்துவர்கள்

தாவர எண்ணெய்கள் -----900
எண்ணெய் ------731
முந்திரி பருப்பு ------596
தேங்காய் ------444
கரும்பு -சக்கரை ------400
வெல்லம் ------383
கேழ்வரகு ------332
அரிசி -----348
கோதுமை ------ 348
கடலைபருப்பு -----361
உளுத்தம்பருப்பு -----350
பாசிபருப்பு ----350
பசும்பால் -----65
கோழி முட்டை ------173
மீன் ------100
ஆட்டுறைச்சி -------194
ஈரல் -----150

வேக வைக்காத உணவுப் பொருள்களில் உள்ள சத்து பொருள்கள் நேரடியாக முழுவதும் உடலோடு கூ டுகின்றன.
வேக வைத்தால் பெருபான்மையளவு அவைகள் நசித்து விடுகின்றன.வேக வைத்த உணவை விட வேகாத உணவு தூயமையானது.சீர் தூக்கி பார்த்தால் வேக வைக்காத உணவை காட்டிலும் வெந்த உணவு விரைவில் அழுகி சிதைந்து போகும்.
வேக வைக்காத உணவு கழிவு உறுப்புகளுக்குக்கான வேலையை அதோடு அவற்றை நோயின்றி வைக்கும்.முற்றிய நோயையும் குணபடுத்தும்.

"அற்றல் அளவறிந்து உண்க அ ஃ துடம்பு
பெற்றன் நெடித்து உய்க்கும் ஆறு "

என்ற
பருப்பு வகைகள் தசைகளுக்கு வலிமை கொடுத்து உடலை வலிமை பெற செய்கிறது.
மேலும் உணவு வகைகளில் காய்கறிகள் தவறாமல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் கிழங்கு வகைகள் அதாவது மண்ணுக்குள் விளையும் கிழங்கு வகைகள் ஒரு சிறந்த உணவு வகை ஆகும் கீரை வகைகள் வயிற்றில் மலசிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் கீரை உணவு மிக அவசியம். என்னென்றால் மலசிக்கல் இல்லையென்றால் நோயிக்கி இடமே இல்லை என்று தேசதந்தை காந்தியடிகள் ஒரு உரையில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுவதாவது பச்சைக் கீரைகளை சரியானபடி உபயோகிக்க பழகி விட்டால் உணவை பற்றி இருந்து வரும் நம் அபிப்பிராயங்கள் எல்லாம் புரட்சிகரமான மாறுதலை அடைந்து விடும் பால் சாப்பிடுவதாலும் இறைச்சி துண்டுகள் சாப்பிடுவதால் ஏற்படும் அதே சத்துக்களை கீரைகள் அதன் பலனை அளித்து விடும்
அதற்க்கு அடுத்து பழ வகைகள் கீரைகளை போன்றே பழங்களும் மிக சிறந்த சக்தியை கொடுக்கிறது.பழங்களில் பலவித உப்பு சத்துக்கள் உள்ளன பழங்கள் ரத்தத்தை சுத்தம் செயகிறது.
இன்று உடல் உழைப்பு போய் எல்லாமே மூளை கணக்கு ஆகி விட்டது.ஒரே இடத்தில உட்கர்ந்து கொண்டு வேலை செய்யும் உடல்கள்தான் பெருகி விட்டன.இதனால் கொழுப்பு படிந்து விடுக்கிறது.
கொழுப்பை சமன் படுத்த வேண்டுமென்றால் அதிக நார்ச்சத்து உள்ள உணவையும் குறிப்பாக கலப்படமற்ற மாவினால் செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும். மேலும் அந்த உணவில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தாராளமாக உண்ண வேண்டும். இந்த உணவுகள் கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், உண்ணும் உணவின் கலோரிகளின் அளவையும் குறைக்கும். அதிக கலோரிகள் உடலால் இயற்கையாகவே கொழுப்பாக மாற்றப்படுகின்றன.
ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை தானிய வகைகளையும், 3 முதல் 5 முறை காய்கறி வகைகளையும், 2 முதல் 4 முறை பழ வகைகளையும் எடுத்துக் கொள்வதன் மூலம், உடலில் கொழுப்பின் அளவை குறைந்த அளவில் வைத்துக் கொள்ள முடியும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad