ஆஸ்கர் விருதும் கமலின் தேர்வும்!





உத்தம வில்லன் படத்திற்கு சவுண்ட் டிசைன் செய்துவரும் க்ரைக் மன் என்ற ஹாலிவுட் சவுண்ட் டிசைனருக்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. WHIPLASH என்ற படத்திற்கு சிறப்பாக சவுண்ட் டிசைன் செய்ததற்காக இந்த விருதை வென்றிருக்கிறார். 

தற்போது உத்தம வில்லன் திரைப்படத்தின் கடைசிகட்ட பணிகள் நடைபெற்று வருவதோடு, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளும் விரைவாக நடைபெற்றுவருகின்றன. படத்தில் இடம்பெறும் சில பாடல்களுக்கு கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகியோர் நடனமாட பெங்களூரில் ரிஹர்சல் நடைபெற்றுவருகிறது. 

உத்தம வில்லன் திரைப்படத்தின் மேலும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் உத்தம வில்லன் கதை, இசை, வசனம், ஒளிப்பதிவு என அனைத்திலும் பிரம்மாண்டங்களை உள்ளடக்கி உருவாகியுள்ளது. எனவே  இசை வெளியீட்டு விழாவன்று அனைத்தையும் கண்டுகளிக்க ரசிகர்களும் திரையுலகினரும் காத்திருக்கின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url