இரண்டு வாரங்களில் ஜிடாக் மெசன்ஜர் சேவை முற்றிலும் நிறுத்தப்படுகிறது!!!


இரண்டு வாரங்களில் யூசர்கள் ஜிடாக் மெசன்ஜர் ப்ளாட்ஃபார்மில் இருந்து கூகுள் ஹேங்கவுட்டிற்கு மாற வேண்டும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. மில்லியன் கணக்கான யூசர்கள் நீண்ட காலமாக ஜிடாக் பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் அவை பயன்படுத்துவது  மிகவும் எளியதாகவும், வசதியாக உள்ளதால் ஜிடாக்கில் இருந்து வேற அப்ளிக்கேஷனுக்கு மாற யூசர்களுக்கு விருப்பமில்லை. ஆனால் கூகுள் நிறுவனம் யூசர்கள் ஜிடாக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

கூகுளின் எதிர்காலம் ஹேங்கவுட், எனவே, ஜிடாக் எடுத்து விடுவது மிகவும் தர்க்க ரீதியான விஷயம் -ஆகும்.  IM சேவை முற்றிலும் ஹேங்கவுட் அப்ளிக்கேஷனாக மாற்றப்படவுள்ளதால், இதை குரோம் வெப் ப்ரவுசர் வழியாக மட்டுமே பயன்படுத்த முடியும். 



ஜிடாக் பிப்ரவரி மாதம் 16ம் தேதியுடன் முற்றிலும் நிறுத்தப்படுகிறது என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆர்குட்டை போலவே ஜிடாக் சேவையும் வரும்காலத்தில் வரலாறாக இருக்கும். வாட்ஸ்ஆப் தற்போது பிசி வரைக்கும் வந்துள்ளதால் ஜிடாக் அநாவசியமானதாக மாறியது. அதனால் கூகுள் ஹேங்கவுட்டில் இன்ஸ்டன்ட் மெசேஜிங், இன்டராக்டிவ் மற்றும் விஷுவல் அப்பிளிங் போன்ற வசதிகளை வழங்கவுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url