பேஸ்புக்கில் பாலியல் துன்புறுத்தல்: தக்க பதிலடி கொடுத்த இளம்பெண்!

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவர் பேஸ்புக்கில் தனக்கு தொடர் பாலியல் துன்பறுத்தல் தந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அருந்ததி என்ற இளம்பெண் ஹைதராபாத்தில் சமூக ஆர்வலராக இருக்கிறார். இவரது அழகான தோற்றத்தால் வெகு நாட்களாக பேஸ்புக்கில் ஒரு நபரால் தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார். நாளுக்கு நாள் அந்த நபரின் தொந்தரவு எல்லை மீறிச் சென்றுள்ளது.
அவர் அந்த பெண்ணுக்கு மலையாளத்தில் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தியில், அருந்ததி என்னை தயவுசெய்து பேஸ்புக்கில் சேர்த்துக் கொள்ளவும்.
நீங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள், உங்கள் கைப்பேசி எண்ணை கொடுங்கள் என்றும், என்னுடன் உறவு கொள்ள தயாரா? எனவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அருந்ததி அதிரடி முடிவை எடுத்தார். அவர் போலீசிடம் செல்லவும் இல்லை, சம்பந்தபட்ட நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டி தீர்க்கவும் இல்லை.

அதற்கு மாறாக, அருந்ததி குறிப்பிட்ட அந்த நபரிடம் இருந்து வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.,கள், பேஸ்புக்கில் அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் என அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அப்படியே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார்.
தொழில்நுட்பம் வளரும் வேகத்திற்கு ஏற்ப அதைப் பயன்படுத்தி பாலியல் வக்கிரங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் அதிகரித்துக் கொண்டே உள்ளனர். தற்போது இவர்களை சமாளிப்பதற்கு அருந்ததி தக்க அணுகுமுறையை கையாண்டுள்ளார்.
Sema