எஸ்.எம்.எஸ்ஸில் மட்டும் 20 கோடி சம்பாதித்த விஜய் டிவி!அடேங்கப்பா !
விஜய் டிவி நடத்தி வரும் ஜூனியர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை நேயர்கள் கொடுக்கும் ஓட்டை வைத்துதான் முடிவு செய்கிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமின்றி உலகமெங்கிலும் உள்ள தமிழர்களும் தங்களுக்கு பிடித்த பாடகர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஓட்டளிக்கிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த நான்காவது சீசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 2 கோடி பேர் எஸ்எம்எஸ் மூலம் வாக்களித்தார்களாம். அப்படி செய்யப்பட்ட ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்குமே 5 ரூபாய் வசூலிக்கப்பட்டதாம். ஆனால் 5 ரூபாய் வசூலித்த விஜய் டிவி அதில் ஒரு எஸ்எம்எஸ்க்கு ஒரு ரூபாய்தான் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்துக்கு கொடுத்ததாம்.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து செய்யப்பட்ட ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் தலா 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாம். அதிலும் செல்போன் நிறுவனத்துக்கு 1 ரூபாய் தான் கொடுக்க்கப்பட்டதாம். அந்த வகையில், அந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் மட்டும் அதாவது இரவு 7 மணியில் தொடங்கி 12 மணி வரை வாக்களித்தவர்கள் செலுத்திய எஸ்எம்எஸ் கட்டணமே விஜய் டிவிக்கு சுமார் 20 கோடியை சம்பாதித்து கொடுத்துள்ளதாம்.