சச்சினுடன் இணைந்து உணவருந்தும் நிகழ்ச்சி, ரூ 1.5 லட்சம் கட்டணம்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று, சாதனை நாயகன் சச்சினுடன் இணைந்து உணவருந்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சச்சினுடன் இணைந்து உணவருந்த 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரும் 22-ஆம் தேதி இந்திய- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியைக் காண ஆஸ்திரேலியா செல்லும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாட்டை அந்த ஹோட்டல் நிர்வாகம் செய்துள்ளது. வரும் 26-ந்தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

உலகக்கோப்பை போட்டியின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சச்சினுடன் உணவருந்த இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும் என சிட்னியை சேர்ந்த ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்பவர்கள் சச்சினிடம் தாங்கள் விரும்பும் கேள்விகளை கேட்டு பதில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url