உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் ....?


உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் ....?





பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE
ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

* உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து MY COMPUTER செல்லவும்.

* அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்துறி properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.

* பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

* அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

* அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad