Kollywood Salary Tracker



லண்டன்
 
பிரபல அமெரிக்க போர்ப் ஸ் மேகசின் இந்திய அளவில்  இந்த ஆண்டு அதிகபட்ச  வருமானம் உள்ள நட்சத்திரங்கள் பட்டியல் குறித்து சமீபத்தில் சர்வே ஒன்று எடுத்தது. இந்த சர்வே முடிவு இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடம் பெற்றார். நம்மூர் விஜய், ரஜினி, அஜீத் ஆகியோர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.

இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் சல்மான் கான் ரூ.244.5 கோடி வருமானத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.அமிதாப்பச்சன் (ரூ.196.5 கோடி)  2 வது இடத்திலும்,   ஷாருகான்  ( ரூ.202.4 கோடி)   3 வது  இடத்திலும், தொடர்ந்து எம்.எஸ் தோணி (ரூ.141.8 கோடி), அக்சய் குமார், வீராத் கோலி, அமீர்கான், தீபிகா படுகோனே,ஹிருத்திக் ரோசன், சசின் தெண்டுல்கர் ஆகியோர் உள்ளனர்.

 தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்( ரூ.50 கோடி) 13-வது இடத்தை பிடித்துள்ளார். லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சோனாக்‌ஷி சின்கா ( ரூ.20.1) 17 வது இடத்தில் உள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு 30 இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையதளபதி விஜய் 41வது இடத்தை பிடித்து தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி 45வது இடத்தையும், அஜீத் 51வது இடத்தையும் கைப்பற்றியுள்ளனர்.  ஏ.ஆர்.முருகதாஸ் 39-வது இடத்தையும், தனுஷ் 78-வது இடத்தையும், பிரபுதேவா 88-வது இடத்திலும் உள்ளனர்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad