கண் நோய்களை தடுப்பது பற்றி பார்ப்போம்.

மனிதர்களின் முக்கிய உறுப்பான கண் மிகவும்
மென்மையான உறுப்பாகும்.
சிலருக்கு பிறவியிலேயே கண் தெரியாமல்
இருக்கும். சிலருக்கு விபத்துகள் மற்றும் இதர
காரணங்களால் கண்கள்
பாதிக்கப்பட்டு பார்வையிழக்கும் அபாயம்
ஏற்படுகின்றது. மாறிவரும் நவீன உலகில்
நமது உடலின் பிற உறுப்புகளைப்போல் கண்களும்
கடுமையாக பாதிக்கப்படுகின்றன. நச்சுப் புகை,
கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன்களில்
படம் பார்த்தல், அதிக வெளிச்சத்தை உமிழும்
விளக்குகள், லேசர் விளக்குகள், அதிக
வெளிச்சத்துடன் மிளிரும் கண்கவர் பட்டாசுகள் என
கண்களை பாதிக்கும் விஷயங்கள் அதிகம் உள்ளன.
எனவே கண்கள் பலம் பெற கீரை, மீன் போன்ற
சத்தான உணவுகள் உட்கொள்வதுடன் கண்
நோய்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக
இருப்பது அவசியம். ஆயுர்வேதம் மற்றும்
வீட்டு வைத்திய முறையில் கண்
நோய்களை தடுப்பது பற்றி பார்ப்போம்.
கண்வலி
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள்
வரை மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி நோய்
தாக்கும். இது தொற்று நோய் வகையை சேர்ந்தது.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பீளையில்
அமர்ந்த ஈ மற்றவரின் கண்களில்
அமரும்போது மற்றவர்களுக்கும் நோய் பரவும்.
இந்நோய்க்கு ஒரு வகை வெண்நிற
கிருமிகளே காரணம். மைக்ரோஸ்கோப் மூலம்
பார்த்தால் அதில் கணக்கற்ற கிருமிகள்
இருப்பதை காணலாம்.
கண்கை தேடி வருவது சிறிய வகை ஈக்கள்.
கசகசா விதையைவிட சற்று பருமனாக கருநிறத்தில்
இருக்கும். இவைகள் கண்களில்தான் அமரும்.
இவற்றை அதிகளவில் பார்க்க முடியாது. ஒரு சில
சமயம்தான் கண் அருகே வரும். பெரியவர்கள் இந்த
ஈக்களை விரட்டி விடுவர். பெரும்பாலும்
சிறியவர்களையே இந்த ஈக்கள் மொய்ப்பதால்
சிறியவர்களுக்கே இந்நோய் பாதிப்பு அதிகம்.
இந்நோய் தொடங்கும்போது கண்ணில் லேசான
அரிப்பும், பின்னர் உறுத்தலும் உண்டாகும். 3
நாட்களில் கண்கள் சிவந்து பீளை கட்ட
ஆரம்பிக்கும். 5 அல்லது 6 நாட்களில் கண்
சிவந்து மண் கொட்டியது போன்ற உறுத்தல்
இருக்கும். பகலை விட இரவில் அதிக உறுத்தலும்,
கடுப்பும் இருக்கும். கண்விழி சிவந்து காணப்படும்.
கண்களில் பீளைத் தள்ளும். 8 அல்லது 9 நாட்களில்
குணமாகி விடும். எனினும் இந்நோயின்
தாக்கத்தை குறைப்பது பற்றி பார்ப்போம்.
இந்நோய் தொடக்கத்தில், பீளையை அழுக்கடைந்த
துணியைக் கொண்டு துடைக்கக் கூடாது.
மெல்லிய சுத்தமான
துணியை கைக்குட்டை அளவு கிழித்து மஞ்சள்
நீரில் நனைத்து உலர வைத்து துடைக்க
வேண்டும். அழுக்கான துணி என்றால் கொதிக்கும்
வெந்நீரில் போட்டு கசக்கி சுத்தம்
செய்து மறுபடியும் மஞ்சள் நீரில்
நனைத்து உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.
இதனை மற்றவர்கள் எந்த வகையிலும் பயன்படுத்த
கூடாது. *எந்த வகையான நுண்ணிய விஷக்
கிருமிகளையும் அழிக்கும்
சக்தி மஞ்சளுக்கு உண்டு. அது பீளையில் உள்ள
லட்சக்கணக்கான கிருமிகளை உடன் அழிக்கும்.
* இரவில் பீளை சேர்ந்து இமைகள்
ஒட்டிக்கொள்ளும். இதனால் கூடுதல்
வலி ஏற்படும். எனவே காலையில் மிதமான
சூட்டில் வெந்நீரில்
சிறிது போரிக்பவுடரை கலந்து சுத்தமான
பஞ்சினால் நனைத்து சுத்தம் செய்யலாம்.
ஒருமுறை நீரில் நனைத்த
பஞ்சை மறுமுறை நனைக்க கூடாது.
* வெந்நீரில் சுத்தம் செய்தபின் 5
நெல்லிக்காயை உடைத்து ஒரு டம்ளர் தண்ணீரில்
போட்டு இரவு முழுவதும் வைத்திருந்து அந்த
தண்ணீரைக்
கொண்டு கண்களை காலை மாலை சுத்தம்
செய்தால் சீக்கிரமே கண்வலி குணமாகும்.
கண் எரிச்சல் சரியாக
சிலருக்கு கண்ணில் அடிக்கடி எரிச்சல் ஏற்படும்.
சிலருக்கு வெண்நிற பீளை சேரும். துடைக்க
துடைக்க பீளை சேரும்.
சிலருக்கு தூங்கி எழுந்ததும்
இவ்வாறு காணப்படும். இதற்கு நெல்லிக்காய்
தூள், கடுக்காய் தூள், தான்றிக்காய் தூள்
இவைகளை வகைக்கு 8 கிராம் வீதம்
எடுத்து ஒன்றாக கலந்து அதில் அரைத்
தேக்கரண்டியளவு எடுத்து அதே அளவு சுத்தமான
பசு நெய்யில் விட்டுக் குழப்பி, காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு சிறிதளவு வெந்நீர்
குடித்து வந்தால் பூரண குணம் கிடைக்கும்.
இவ்வாறு 21 நாட்கள் சாப்பிட வேண்டும். இந்த
மருந்தை உட்கொள்ளும் போது,அதிக காரம்,
புளிப்பு, சேர்க்க கூடாது. காரத்திற்கு மிளகும்,
புளிப்பிற்கு எலுமிச்சையும் எடுக்கலாம்.
கண் பார்வை தெளிவடைய
சிறுவர்கள் முதல் பெரியவர்கள்
வரை சிலருக்கு கண் பார்வை தெளிவில்லாமல்
மங்கலாக இருக்கும். இதற்கு கண் கண்ணாடிகள்
பரிந்துரைக்கப்படுகிறது. நாளுக்கு நாள் அதன் பவர்
அதிகரிக்கும். ஆனால் கண்ணாடி அணியாமல்
பணச்செலவின்றி பாட்டி வைத்தியம்
கை கொடுக்கிறது. இதற்கு நெல்லிக்காய்
அருமருந்தாகிறது. நன்றாக பழுத்த
நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி கனத்த
ஊசியை கொண்டு அடுத்தடுத்து இரண்டு மூன்று இடங்களில்
குத்திவிட்டால் அதிலிருந்து சாறு வெளியேறும்.
இந்த சாற்றை ஒரு கண்ணுக்கு இரண்டு துளிகள்
வீதம் இரு கண்களுக்கும் விட வேண்டும்.
காலை மாலை இருவேளையாக 21 தினங்கள்
தொடர்ந்து விட்டு வந்தால்
பார்வை தெளிவடையும். 7 நாளில் மங்கல்
விலகும். 21 நாட்களில் பூரண நலம் கிடைக்கும்.
கண் சிவப்பு குணமாக
சிலருக்கு கண் எப்போதும் சிவந்து காணப்படும்.
கண்ணில் அடிப்பட்டாலும் கண் சிவக்கும். இதற்கு,
நெல்லி விதை 16 கிராம், ஆல்பக்கோடா பழம் 32
கிராம், கடுக்காய் 48 கிராம் வீதம் சேகரிக்க
வேண்டும். இதில்
கடுக்காயை உடைத்து விதையை எடுத்து விட
வேண்டும்.ஆல்பகோடா பழத்தின்
விதையை எடுத்து உடைத்து அதன் உள்ளே உள்ள
பருப்பை மருந்துடன் சேர்த்து எல்லாவற்றையும்
அம்மியில் வைத்து தேன்விட்டு மைபோல அரைக்க
வேண்டும். இதனை பாட்டிலில்
சேகரித்து வைத்து காலை மாலை அரை தேக்கரண்டி குடித்து வந்தால்
கண் சிகப்பு மாறும். குணமானதும்
நிறுத்தி விடலாம்.
மாலைக்கண் சரியாக
வயோதிகம் காரணமாக சிலருக்கு பொழுது மங்கிய
உடன் கண் தெரியாது. இதனை மாலைக்கண்
என்பார்கள். இதற்கு நெல்லிக்காய் தூளில்
தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேனும்
சேர்த்து இரவு ஆகாரத்திற்கு பின்
அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வெந்நீர்
குடித்து வர பார்வை தெளிவடையும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad