விஜய்க்குத் தம்பியாக நடிக்க நோ சொன்ன தனுஷ்!
இந்த நிகழ்வு 2002ம் ஆண்டு நடந்தது. சரத்குமாரின் 'சண்டமாருதம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ் 2002ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படத்தில் முதன் முதலில் விஜய்க்குத் தம்பியாக நடிக்க தனுஷிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.
அப்போதுதான் ‘துள்ளுவதோ இளமை’ படம் வெளியாகி இருந்தது. இதுகுறித்து தனுஷிடம் பேசினேன். '' நான் ‘காதல் கொண்டேன்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். இனிமேல் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிக்க நினைக்கிறேன் '' என்றார் தனுஷ்.
தனுஷ் தம்பியாக நடிப்பதாக இருந்தால் அவருக்கென்று பிரத்யேக காதல் காட்சிகள் மற்றும் பாடல் என திட்டமிட்டிருந்தாராம். அவர் மறுத்த காரணத்தால்தான் அவற்றையெல்லாம் படத்தில் சேர்க்காது விட்டுவிட்டேன் என்று தனது அப்போதைய நிகழ்வைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.
இது குறித்து தனுஷிடம் பேசிவிட்டுத்தான் இந்த தகவலை சொன்னதாக கூறியுள்ளார் ஏ.வெங்கடேஷ் .