சொந்தத் தாய்மாமனை கண்டுகொள்ளாத விஜய் அரசியலுக்கு வந்தால் எப்படி நல்லது செய்வார்?
படம் ரிலீசானாலும் சர்ச்சை, ஆகாவிட்டாலும் சர்ச்சை என விஜய்யைப் பற்றி தொடர்ந்து இணையதளங்களில் செய்திகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. நேற்று முன் தினம் திருநெல்வேலியில் ரசிகர்கள் முன்னிலையில் கத்தி படத்தின் 50-வது வெற்றி விழாவைக் கொண்டாடிய விஜய் தனது அரசியல் பிரவேசத்துக்கு ஏற்றாற்போல
நடிகர் விஜய்யின் தாய்மாமன் பாடகர் சுரேந்தர் உடன் டைரக்டர் வேலு பிரபாகரன்
இவரை ஒரு பழைய ஸ்கூட்டி ஓட்டிய படி வடபழனி ஏரியாவில் அடிக்கடி பார்க்கலாம். மிக மிக சாதாரண வாழ்க்கை வாழும் அவரது நிலை எங்களை போன்ற சினிமாக்காரர்களுக்கே அதிர்ச்சியும், வேதனையும் தரும்.
இருவருக்கும் சரியான உறவில்லை என்று நெருங்கியவர்களுக்கு தெரியும், இருந்தாலும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற நோக்கத்தில் திட்டங்கள் தீட்டி காய்களை நகர்த்தும் ஒருவன்.அதுவும் பல கோடிகளை ஊதியமாக பெரும் ஒருவன், எவ்வளவு மனக்கசப்பு இருந்தாலும் பரந்த மனப்பான்மையோடு தன் மாமன் நிலையை உயர்த்த மனமில்லாதவன். பல கோடிகள் புரளும் போதும் தன் இரத்த சொந்தம் ஏழ்மையில் சிக்கியிருப்பதை கண்டும் உதவாத சிறு மனம் படைத்த மனிதாபிமானமற்ற இதயமில்லாதவன்..
அரசியலுக்கு வந்து… மக்களுக்கு என்ன செய்வான்.. என்று காட்டமாக பொங்கியிருக்கிறார்.
இதற்கு விஜய் ரசிகர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.