கருப்புப் பணம் குவிப்பதில் இந்தியாவுக்கு 3வது இடமாம்!!!
கருப்புப் பண விவகாரத்தில் இந்தியா உலக அளவில் 3வது இடத்தில் இருக்கிறதாம். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலிருந்து 440 பில்லியன் டாலர் பணம் கருப்புப் பணமாக வெளியேறியுள்ளதாம். கடந்த 2012ம் ஆண்டு உலக அளவில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணத்தின் அளவு 94.76 பில்லியனாம். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சம் கோடியாகும்.
கடந்த 2003ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து ரூ. 28 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளியேறியுள்ளதாம். குளோபல் பினான்சியல் இன்டெகிரிட்டி என்ற அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்யா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அவர்களின் கருப்புப் பணம் 122.86 பில்லியன் டாலராகும். 2வது இடத்தில் சீனா 249.57 பி்ல்லியன் டாலர்களுடன் உள்ளது. வளரும் நாடுகளிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் வெளியேறிய கருப்புப் பணத்தின் அளவு 6.6 டிரில்லியன் டாலராகும். இதில் இந்தியாவிலிருந்து வந்த கருப்புப் பணம் மட்டும் 439.59 பில்லியன் டாலராகும். ஆனால் இவ்வளவு கருப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் கொட்டிக் கிடந்தாலும் கூட இந்திய அரசால் ரூ. 4479 கோடியை மட்டுமே கணக்கில் காட்ட முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.