சூர்யாவைக்கொண்டு காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை கெளதம்மேனன் இயக்கி வந்தபோது, அவரும் , அஜீத்தும் இணைவதற்கான ஒரு சூழுலும் உருவானது. ஆனால், அதையடுத்து ஏற்பட்ட சில எதிர்பாராத பிரச்னைகளால் அஜீத் எனக்கு தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு அந்த புராஜக்டையே கிடப்பில் போட்டார் கெளதம். இதனால், அவருக்கும், அஜீத்துக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
ஆனால், ஆரம்பம் படத்தை முடித்து விட்டு, வீரம் படத்தில் அஜீத் ஈடுபட்டிருந்த நேரம், கெளதம்மேனனை சூர்யா கழட்டி விட்டார். இதனால் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டு நின்றார் கெளதம். அப்போது பழைய மனஸ்தாபத்தை தள்ளி வைத்து விட்டு, தானாக முன்வந்து கெளதம்மேனனுக்கு கால்சீட் கொடுத்தார் அஜீத்.
அதனால் அப்படத்தில் அஜீத்துடன், சிம்புவையும் இணைத்து மல்டி ஹீரோ ஸ்கிரிப்டாக பண்ணியுள்ளார் கெளதம். தற்போது படப்பிடிப்பும் தொடங்கப்போகிறார்கள். இந்த நிலையில், அஜீத் தனக்கு செய்த உதவியை சொல்லி உணர்ச்சிவசப்படுகிறாராம் கெளதம். எனக்கு தொடர்ந்து பல தோல்வி படங்கள். அவருக்கோ தொடர்ச்சியாக ஹிட் படங்கள். அதுவும் அஜீத்தை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க பல முன்னணி டைரக்டர்களே அலைந்து கொண்டிருந்தார்கள்.
ஆனபோதும், எனது நிலையை அறிந்து கைகொடுத்தார் அஜீத். வீரம் படத்திற்கு பிறகு கெளதம் படத்தில்தான் நடிக்கிறேன் என்று அடித்து சொன்னவர், ஏ.எம்.ரத்னத்திடம் என்னை கூட்டிச்சென்று தயாரிப்பாளரையும் அவரே கொடுத்தார். அதன்பிறகு பலமுறை சந்தித்தபோதும், பழைய விசயங்கள் எதையும் இப்போதுவரை பேசியதில்லை. புதிய விசயங்களையும், புதிய படத்தை பற்றி மட்டுமே புதுசு புதுசாக பேசுகிறார். உண்மையிலேயே அஜீத்துக்கு ரொம்ப பெரிய மனசுதான் என்கிறாராம் கெளதம்.
cinema
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.