தமிழ் சினிமா பாணிக்கு மாறுகிறார் மோகன்லால்
மலையாள சினிமாவின் வியாபார வட்டம் குறைவு. அதனால்தான் அவர்கள் எடுக்கிற படங்கள் குறைந்த பட்ஜெட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதன்காரணமாக தமிழ் படங்களை மாதிரி பிரமாண்டங்கள் இருக்காது. குறிப்பாக, மோகன்லால், மம்மூட்டி போன்ற அங்குள்ள மேல்தட்டு ஹீரோக்களே இங்குள்ள கதாநாயகிகள் வாங்குவது போன்றுதான் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
அதேசமயம், மோகன்லால், மம்மூட்டி போன்ற நடிகர்கள் தமிழுக்கு வரும்போது அவர்களுக்கு பெரிய தொகையை சம்பளமாக தருகிறார்கள். அதோடு, இங்குள்ள நடிகர்களுக்கு இணையான அதிரடி வேடங்களிலும் நடிக்க வைப்பதால், இப்போது மோகன்லால் மலையாள பாணியில் இருந்து விடுபட்டு தமிழ் சினிமா பாணிக்கு மாறியுள்ளாராம்.
தமிழில் இருவர், சிறைச்சாலை என நடிக்கத் தொடங்கியவர், கமலின் உன்னைப்போல் ஒருவன், விஜய்யின் ஜில்லா படங்களுக்குப்பிறகு தமிழ் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருப்பதால், இனி தான் நடிக்கும் மலையாள படங்களில் கதைகளும் தமிழ் சினிமா கதைகள் போல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். அதனால், மோகன்லாலுக்காக மலையாள பாணியில் கதை தயாரித்து ஓ.கே பண்ணி வைத்திருந்த டைரக்டர்கள், தமிழ் சினிமாவின் கமர்சியல் மசாலாவை கலந்து கதையில் திருத்தம் செய்து கொண்டிருக்கிறார்களாம், அப்படி தயாராகும் படங்களை மலையாளம் மட்டுமின்றி, தமிழிலும் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம் மோகன்லால்.