கையடக்கத் தொலைபேசிகளுக்கு இருதய துடிப்பின் மூலம் சக்தி
பாவனையாளரது இருதய துடிப்பால் சக்தியூட்டப்பட்டு செயற்படக்கூடிய பொருத்தக் கூடிய பற்றரியொன்றை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மேற்படி பற்றரியானது எதிர்கால கையடக்கத்தொலைபேசிகளுக்கு சக்தியூட்டுவதற்கு மின்னேற்றி உபகரணங்களை (சார்ஜர்)எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குவதாக அமைகிறது.
அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பற்றரி இருதயம், நுரையீரல் மற்றும் பிரிமென்றகடு போன்ற உறுப்புகளின் தொடர்ச்சியான அசைவை மின் சக்தியாக மாற்றுகிறது.
ஏற்கனவே இத்தகைய பற்றரி இதய இயக்க உபகரணமொன்றுக்கு சக்தியூட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறிய நெகிழ்ச்சித்தன்மையுள்ள பற்றரியை பசுக்களில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அது இருதய இயக்க உபகரணமொன்றை செயற்படுத்துவதற்கு தேவையான அளவு சக்தியைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந் நிலையில் மேற்படி பற்றரியை எதிர்காலத்தில் பலதரப்பட்ட கையடக்க தொலைபேசிகளுக்கும் சக்தியூட்ட பயன் படுத்துவதற்கு விஞ்ஞானிகள் திட்ட மிட்டுள்ளனர்.