நாளை தொடங்குகிறது பிளஸ் டூ பொதுத்தேர்வு! – முறைகேடுகளைத் தடுக்க

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் டூ பொதுத் தேர்வை மாணவர்கள் சிறப்பாக எழுத 2 ஆயிரத்து 944 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மட்டும், கூடுதலாக 150 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலூர், சேலம், வேலூர், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, சென்னை – புழல் சிறைகளிலுள்ள கைதிகள் 45 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் டூ மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, தேர்வு அறை நுழைவுச் சீட்டுகள் ஆன்லைன் மூலமாகப் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டில், மாணவர்களுக்கு சிறப்பு அறிவுரைகளும் அச்சிடப்பட்டுள்ளன.

தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வுகள் எழுதும் வகையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிளஸ் டூ தேர்வில் முறைகேடுகள் நடக்காமலிருக்க, அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 4,000 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பொதுத்தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த கட்டுப்பாட்டு அறையை 93854 94105, 93854 94115, 93854 94120, 93854 94125 எண்களில் மாணவர்கள் தொடர்புகொள்ளலாம். 

தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது. பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், செல்போன் வைத்திருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

0 points
Upvote Downvote

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote