யோகி பாபு படத்துல கனடா மாடலா!!!!!

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம்  கூர்க்கா. இந்த படத்தில் யோகி பாபுவுடன் கனடா நாட்டை சேர்ந்த மாடல் அழகி எலிசா என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார்.

யோகி பாபு  அஜித், விஜய், சிவா கார்த்திகேயன்,விஜய சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்தவர்.இவர் தற்போது ஹீரோவாக இந்த படத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.

சாம் ஆண்டான் ‘டார்லிங்’ ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படங்களை கொடுத்துள்ளவர்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை  சிவ கார்த்திகேயன் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த படத்தை பற்றி சாம் ஆண்டன் கூறியதாவது; ‘இந்த படத்தில் அமெரிக்க தூதராக எலிசா நடித்துள்ளார். இவரது நடிப்பு திறனை ஆடிஷனில் பார்த்து உடனே தேர்ந்து எடுத்துள்ளேன். இவர் இந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். இவருக்கும் யோகி பாபுக்கும் இடையே எந்தவித ரொமான்ஸும் கிடையாது. இந்த படத்தின் படப்பிடிப்பு  டிசம்பரில் தொடங்க உள்ளது’. இவ்வாறு அவர் கூறினார்.

இவர் சர்க்கார் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote