சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் திடீர் சமரசம்!

சர்கார் பட கதை தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், வருண் ராஜேந்திரன் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையக் காண ஏ.ஆர்.முருகதாஸ், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் ஆகியோர் நேரில் வந்துள்ளனர்.

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் சர்கார் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கியுள்ளார். இந்தக் கதையை ஏற்கெனவே நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளேன். எனவே இந்தப் படத்தின் கரு மற்றும் கதை என்னுடையது என்பதால் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே சர்கார் படத்துக்கு தடைகோரி யாராவது வழக்கு தொடர்ந்தால் தங்களது தரப்பையும் அழைத்து விசாரிக்க வேண்டும் எனவும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வருண் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் கடந்த 26-ம் தேதி நடந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார். அப்போது இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையை நேரில் பார்ப்பதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் நேரில் வந்திருந்தனர். இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் மனுதாரர் தரப்பில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அடுத்த 1 மணி நேரத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் உடனான சமரசத்தை வருண் என்கிற ராஜேந்திரன் ஏற்றுக் கொள்கிறாரா என்பது தெரிய வரும் . அதைப் பொறுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக படத்தின் டைட்டில் கார்டில் செங்கோல் கதாசிரியர் வருண் ராஜேந்திரனின் பெயர் போட வேண்டும். இழப்பீடாக ரூ.30 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote