in

Earthquake in Chennai: சென்னையில் இன்று அதிகாலை நில அதிர்வு!!

சென்னையில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை இரவில் உணர்ந்ததாக பலரும் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

நில அதிர்வு இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு 4.9 ரிக்டர் அளவில் இருந்துள்ளது. சென்னையின் தி,நகர் போன்ற பகுதிகளில் இந்த அதிர்வை மக்கள் உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. 

அமெரிக்க புவியியல் ஆய்வு அறிக்கையின்படி சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10கி.மீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டுள்ளது. பொதுவாக அந்தமான் நிகோபர் தீவுகளில் இதுபோன்று நில அதிர்வு அடிக்கடி ஏற்படுவது உண்டு. தற்போது சென்னைக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டு இருப்பது சென்னை வாசிகளை அச்சம் அடையச் செய்துள்ளது. 

மீண்டும் இன்று காலை 6.55 மணிக்கு நில அதிர்வு இருந்ததாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். 

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

5 மணி நேரத்தில் 15 கி,மீ., கடந்து மக்களை சந்தித்த பிரியங்கா

நெல்லை செய்திகள்