உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

கார்டிப்,
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கருணாரத்னே தலைமையிலான இலங்கை மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஆட்டம் நடைப்பெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே முதல் ஓவரிலேயே 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய குசல் பெரேரா 29 ரன்னில் அவுட்டாக, அவரைதொடர்ந்து களமிறங்கிய குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா , மேத்யூஸ், ஜீவன் மென்டிஸ் ஆகியோர் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். அணியை சரிவிலிருந்து மீட்க  திசரா பெரேரா மற்றும் கருணாரத்னே ஜோடி சேர்ந்தனர். இதில் ஓரளவு ரன் சேர்த்த திசரா பெரேரா 27 ரன்னில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய இசுரு உதனா டக் அவுட் ஆனார். சுரங்கா லக்மல் 7 ரன்னிலும், மலிங்கா 1 ரன்னிலும் வெளியேறினர். இருப்பினும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கருணாரத்னே பொறுப்புடன் விளையாடி ஆட்டமிழாக்காமல் 52 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இலங்கை அணி 29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணியில் மாட் ஹென்றி மற்றும் பெர்குசன் 3 விக்கெட்களை சாய்தனர். மேலும் டிரென்ட் பவுல்ட், கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீ‌ஷம், சான்ட்னெர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து நியூசிலாந்து அணி 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்தில் மற்றும் காலின் மன்ரோ பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  இவ்விரு வீரர்களும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர்.
இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இறுதியில் 16.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி (137 ரன்கள்) இலக்கை எட்டியது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் 73 ரன்களுடனும், காலின் மன்ரோ 58 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

What do you think?

0 points
Upvote Downvote