யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்-முதல்வர் பழனிசாமி

சேலம் ஓமலூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

100 ஏரிகளில் உபரிநீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  உரிய தண்ணீர் இருப்பு இருந்தால் மேட்டூர் அணை திறக்கப்படும்.  ஒரு சொட்டு நீரை கூட அரசு வீணாக்காது.

8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.  சிலர் எதிர்க்கின்றனர்.  நவீன முறைப்படி அதிவிரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.  8 வழிச்சாலை எனப்படும் அதிவிரைவு சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்.  யாருக்கும் நெருக்கடி தந்து நிலத்தை கைப்பற்றமாட்டோம்.புதிய தொழிற்சாலைகள் அமைய வேண்டுமானால் உள்கட்டமைப்பு  சிறப்பாக இருக்க வேண்டும்.  தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு  அல்ல.எந்த உண்மையான அ.தி.மு.க. தொண்டரையும் யாரும் தொட்டு பார்க்க முடியாது என கூறினார்.

  • Do You Accept 8 HighWay Road ?

    • Yes
    • No

This post was created with our nice and easy submission form. Create your post!