கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்கின்றன

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அதிமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருகின்றன. அதிமுக கூட்டணியைக் கண்டு ஸ்டாலின் மிரண்டுபோய் உள்ளார். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. அடுத்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். 

பாலில் சிறிதளவு விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். எனவே தொண்டர்கள் மிகவும் கவனமாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு மாத காலமே அவகாசம் இருக்கும். வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும்.  கூட்டணி கட்சியினரும் கவனமான இருந்து முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை சந்திக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote