திருச்செந்தூரில், மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் பரமசிவன் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் கடந்த 8-ந்தேதி இரவில் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகா மடம் பகுதியில், கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், போலீசாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிளை திருப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் மதுரை வண்டியூரைச் சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (24), அன்பு மகன் முருக சூரியன் (21) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து பரமசிவனின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, மோட் டார் சைக்கிளை மீட்டனர்.

YOUR REACTION?

Facebook Conversations