கோவில்பட்டியில், விவசாயிகள் கும்மியடித்து நூதன போராட்டம் - பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க கோரிக்கை
பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கும்மியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பரமேசுவரன் முன்னிலை வகித்தார். லட்சுமிபுரம் கூட்டுறவு சங்க தலைவர் முருகன் வரவேற்று பேசினார்.

கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத்தொகை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகையை மத்திய, மாநில அரசுகள் உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சங்க மாவட்ட தலைவர் காசிராஜன், விருதுநகர் மாவட்ட செயலாளர் மாரியப்பன், இயற்கை விவசாய சங்க தலைவர் கருப்பசாமி, ஒன்றிய செயலாளர் அய்யாசாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் மோகன்தாஸ் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி, கும்மியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

YOUR REACTION?

Facebook Conversations